tamilnadu

img

ஐ.ஐ.டி களில் சமூக நீதிக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பது? சு.வெங்கடேசன் எம்.பி., கேள்வி

மதுரை:
ஐ.ஐ.டி களில் சமூக நீதிக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பது என மத்திய கல்வியமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் திங்களன்று கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
மத்திய கல்வி நிறுவனங்கள் (அனுமதிகளில் இட ஒதுக்கீடு) சட்டம் 2006 மற்றும் மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பதவிகளில் இட ஒதுக்கீடு) சட்டம் 2019 மற்றும் ஐ.ஐ.டிகளுக் கான இயக்குநரின் (23.04.2020) ஆணை ஆகிய வற்றை தங்களின் பார்வைக்கு கொண்டு வர விழைகிறேன்.

ஐ.ஐ.டி களில் இளங்கலை/முதுகலைப் பட்டங்கள்/முனைவர் ஆய்வுப் பிரிவுகளில்மாணவர் அனுமதி மற்றும் ஆசிரியர், ஆசிரிய ரல்லாத நியமனங்கள் ஆகியவற்றுக்கான இடஒதுக்கீடு அமலாக்கம் பற்றிய குழு ஒன்றை மேற்கண்ட ஆணை அமைத்தது. இக்குழுவிற்கு தில்லி ஐ.ஐ.டி இயக்குனர் தலைவராகவும், சென்னை ஐ.ஐ.டியின் பதிவாளர் அமைப் பாளராகவும் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.அக் குழுவிற்கு ஒரு மாத கால அவகாசம்தரப்பட்டு தனது அறிக்கையை முடிவெடுப்ப தற்கான உரிய மட்டத்தின் பரிசீலனைக்கும், ஒப்புதலுக்கும் முன் வைக்க வேண்டுமென கூறப்பட்டிருந்தது.மேற்கண்ட ஆணை பிறப்பிக்கப்பட்டு தற்போது 100 நாட்கள் உருண்டோடி விட்டன. மேற்கண்ட குழு தனது அறிக்கையை தயாரித்துசமர்ப்பித்து விட்டதா என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.இந்த ஆய்வு தேவைப்பட்டதன் காரணம், ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான சமூக நீதியை வழங்குவதில் மத்திய கல்வி நிறுவனங்கள் தவறியதுதான். அதுவும் அதற்கான சட்டம்நிறைவேற்றப்பட்டு 14 ஆண்டுகள் ஆன பின்னரும்இந்த நிலை. ஆசிரியர், ஆசிரியரல்லாத நிய மனங்களிலும் எஸ்.சி, எஸ்.டி பிரதிநிதித்துவம் மிக மிகக் குறைவு. ஆகவே அதற்கான 2019 சட்டமும் உறுதியாக அதன் நோக்கம் சிதை யாமல் அமலாக்கப்பட வேண்டும்.சமூகத்தின் அடித்தள மக்களாய் விளங்கக் கூடிய எஸ்.சி, எஸ்.டி பிரிவினர்க்கான நீதி வழங்கப்படுவது அதிக முன்னுரிமை பெற வேண்டிய பிரச்சினை என்பதை நீங்களும் அறிவீர்கள். இது சம்பந்தமாக உங்களின் விரைவான மறுமொழியை எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.

;